வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (09:15 IST)

அடுத்தடுத்த நாட்களில் அஜித், கமல் படங்களில் ஏற்பட்ட விபத்து: தமிழ் சினிமா அதிர்ச்சி

அடுத்தடுத்த நாட்களில் அஜித், கமல் படங்களில் ஏற்பட்ட விபத்து
தமிழ் சினிமா உலகில் அஜித் மற்றும் கமல் படங்களின் படப்பிடிப்புகளில் அடுத்தடுத்த நாட்களில் நடந்த விபத்து காரணமாக திரையுலகினரை அதிர்ச்சியில் உள்ளனர்
 
நேற்று அஜித் நடித்த வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் மோட்டார் சைக்கிள் சேஸிங் காட்சியின் படப்பிடிப்பின்போது காயமடைந்ததாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இன்று இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது 
 
இன்று நடைபெற்ற இந்தியன் 2’ படப்பிடிப்பின் விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளதும், 10 பேர் காயமடைந்துள்ளதும் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு பெரிய நடிகர்களின் படங்களில் விபத்து ஏற்பட்டுள்ளதால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
படப்பிடிப்பின் போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து மிகுந்த கவனத்துடன் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என திரையுலகின் மூத்த கலைஞர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இனியாவது விபத்துக்கள் இல்லாத வகையில் படப்பிடிப்பை நடத்த வேண்டும் எனவும், அனைவரும் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது