நடிகர் அஜித்திற்காக ஒரு புரோமோ..பிரபல எடிட்டர் டுவீட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரை பற்றிய ஒரு புரோமோ தயார் செய்யவுள்ளதாக பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார்.இவர் சினிமாவில் மட்டுமின்றி, பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பல துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
அஜித்குமார், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் நடித்து வந்த துணிவு படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் மோதுகிறது.
இந்த நிலையில், ராஜா ராணி, மெர்சல், பிகில், தெறி உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய ரூபன், இன்று தன் டுவிட்டரில், நான் மிகவும் விரும்பும் அஜித் பற்றிய ஒரு புரொமோ தயார் செய்திருக்கிறேன். இந்த புரோமொ இம்மாதத்திற்குள் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Sinoj