1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (09:00 IST)

துணிவு படத்துக்கு ஒரு நாள் முன்பாக வெளியாகும் விஜய்யின் வாரிசு!

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளன.

விஜய் நடித்த வாரிசு ஜனவரி 13ம் தேதியும் அஜித் நடித்த துணிவு ஜனவரி 12-ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்றும் இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் நடித்த வீரம் மற்றும் விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்கள் பொங்கல் திருநாளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் அதன் பின்னர் இப்போதுதான் மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.