1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (08:56 IST)

கருணநிதிக்கு அஜித் இறுதியஞ்சலி. அமெரிக்காவில் இருந்து திரும்புவாரா விஜய்?

நேற்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்களும், அரசியல் பிரமுகர்களும், திரையுலகினர்களுக்கு கருணாநிதியின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நடிகர் அஜித், நேற்று 'விசுவாசம்' படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். சற்றுமுன் அவர் ராஜாஜி ஹாலுக்கு சென்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவருடைய மனைவி ஷாலினியும் அஞ்சலி செலுத்தினார்.
 
மேலும் நடிகர் சுர்யா, நடிகர் அதர்வா, இயக்குனர் ஏ.எல்.விஜய், ஸ்டண்ட் சில்வா, உள்பட பல திரையுலகினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய் அமெரிக்காவில் படப்பிடிப்பில் உள்ளதால் அவர் அஞ்சலி செலுத்த சென்னை திரும்புவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்