புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:56 IST)

கூலி படத்தில் அமீர்கான் இணைவது உறுதி…!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது.  லோகேஷ் கன்கராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  மேலும் அமீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த தகவல் குறித்து தற்போது மேலதிக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிக்க அமீர்கான் ஒத்துக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விரைவில் இதன் ஷூட்டிங்கில் அமீர்கான் கலந்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் உடல்நிலைக் காரணமாக தற்போது கூலி திரைப்படத்துக்கு ஒரு இடைவெளி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.