கொரோனா ...தனிமைப்படுத்திக் கொண்ட பாகுபலி ஹீரோ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் ராதே ஷ்யாம், ஆதி புரூஸ், சலார் உள்ளிட்ட பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். இன்று அவரது மேக்கப் கலைஞருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.
பாகுபலி1,2 ஆகிய படங்களில் நடித்தவர் பிரபாஸ். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவர், இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அத்துடன் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அவர் அதிகம் சம்பளம் பெரும் நடிகராகவும் அறியப்படுகிறார்.
இந்நிலையில், பிரபாஸின் மேக்கப் கலைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், அவரது நடிப்பில் உருவாகிவரும் படங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனிப்படுத்துதலில் இருந்து அவர் வெளியே வந்த பிறகு தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.