வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (08:02 IST)

அது மட்டும் அப்படி நடந்திருந்தால்… இன்று பாகுபலி இடத்தில் இருந்திருக்கும் – கே எஸ் ரவிக்குமார் ஆதங்கம்!

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த கோச்சடையான் திரைப்படம் மோஷன் கேப்சர் முறையில் உருவாக்கப்பட்டது.

ரஜினி உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பின்னர் அவரின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு மோஷன் கேப்சர் முறையில் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் கோச்சடையான். ஆனால் பொம்மை படம் பார்ப்பது போல இருந்ததால் அந்த படத்தை பெரிதாக ரசிகர்கள் கொண்டாடவில்லை.

இந்நிலையில் அந்த படத்துக்கு கதை , திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய கே எஸ் ரவிக்குமார் ‘கோச்சடையான் மட்டும் மோஷன் கேப்சரில் உருவாகாமல் இருந்திருந்தால் இன்று பாகுபலி கொண்டாடப்படும் அளவுக்கு அமைந்திருக்கும். நாங்கள் அந்த படத்தை எடுக்கும் போது பாகுபலி பற்றிய அறிவிப்பு கூட வரவில்லை.’ எனக் கூறியுள்ளார்.