அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்..?
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகி்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படம் முடிந்து அடுத்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வர, தற்போது கிட்டத்தட்ட உறுதியான ஒரு தகவல் கிடைத்துள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் தான் நடிக்க உள்ளாராம். இது ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போது கொடுத்து வாக்கு என கூறப்படுகிறது. இப்படத்தை தீரன் வினோத் இயக்கவுள்ளதாகவும், இதற்காக அஜித் இரண்டு முறை வினோத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இப்படம் அஜித்தை வைத்து இயக்குநர் வினோத் இயக்கும் படம் இந்தி ரீமேக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி இந்தியில் கடந்த 2016 -ஆம் ஆண்டு வெளியான பிங்க் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிங்க் படத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியிருந்தனர். தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். இச்செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.