திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (21:53 IST)

''மீண்டும் பைக் பயணம்'' அஜித்தின் புகைப்படம் வைரல்

ajithkumar
நடிகர் அஜித்குமார் மீண்டும் பைக் பயணம் செய்து வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சில  நடிகர் அஜித்குமார் தன் ஷூட்டிங் பணிகள் முடிந்தததால், மீண்டும் தன் பைக் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் தொடங்கப்படும் வரை அவர் வட இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாதளங்களுக்குச் செல்லுவார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  இவர், புனேவிற்குச் சென்ற நிலையில், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக, அஜித், இமயமலை, பத்ரி நாத், கேதார்  நாத் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj