வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (14:14 IST)

'' #AK61 ''பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது ரிலீஸ்? முக்கிய தகவல்?

ajith61
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வெளிப்பில் பிப்ரவரில் வெளியான படம் வலிமை. இப்படத்தை அடுத்து அஜித்குமார், நடிப்பில் உருவாகி வரும் அஜித்61. இப்படத்தை ஹெச்.வினோத்குமார் இயக்கி வருகிறார். 

போனிகபூரின் தயாரிப்பில் பிரமாண்டமான முறையில் இப்படம் உருவாகி வருகிறது.
தற்போது, ஷூட்டிங்கிற்கு இடைவெளி விடப்பட்டுள்ளதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அஜித்61 படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அஜித்61 படக்குழு இன்னும் சில நாட்களில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், , வரும் அக்டோபர் 2 ஆம் தேதி துணிவே துணை என்ற டைட்டில் போஸ்டர் வெளியாகலாம் எனவும் இதுகுறித்த அறிவிப்பு தகவல் எப்போது   வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, AK61r #AK61FirstLook என்ற ஹேஸ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதனால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சசி அடைந்துள்ளனர்.

அஜித்61 படம் அடுத்தாண்டு ஜனவரியில், விஜய்யின்  வாரிசு படத்துடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.