1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (22:40 IST)

இளைஞரின் பைக்கை சரி செய்து கொடுத்த நடிகர் அஜித்குமார் !

ajithkumar
நடிகர் அஜித்குமார் தன் பயணத்தின்போது, ஒரு இளைஞரின் பைக்கை சரிசெய்தது கொடுத்துள்ளார்.  இதுகுறித்து அந்த இளைஞர் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அஜித்61 படத்தில் நடித்துக் கொடுத்தார்.தற்போது படப்பிடிப்புக்கு  நிறுத்தப்பட்டுள்ளதால் மீதமுள்ள இந்திய மா நிலங்கள் மற்றும் இடங்களுக்கு அவர் தற்போது பைக்கில் பயணம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், அஜித், மணாலி, சார்ச்சு, லேஜ்,  நூர்பா, வேலி, பாங்காங்,. கார்கில், ஸ்ரீ நகர், ஜம்மு, சட்டிஷர், ஹரித்துவார், ரிசிகேஷ், கீதார் நாத், பத்ரி நாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ள நிலையில், விரைவில் அஜித் இப்பயணத்தை முடித்து படப்பிடிப்பு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.
Actor Ajith Kumar

அஜித் குறித்த தகவல்களும், அவர் படத்தின் அப்டேட் கிடைக்க வேண்டுமென அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அஜித் தன்  பயணத்தின் போது, வழியில், மஞ்சு காஷ்யப்பா என்ற இளைஞரின் பைக் பஞ்சர் ஆகி நின்றுள்ளது, அதைப் பார்த்த அஜித்குமார், அதை சரி செய்து கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இதை மஞ்சு காஷ்யப்பா தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.