திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 ஜனவரி 2025 (07:44 IST)

அஜித், ஷோபனா, பாலையா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விருதுகள் நடிகர் அஜித், நடிகை ஷோபனா மற்றும் தெலுங்கு நடிகர் பாலையா உள்பட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமையல் கலை வல்லுநர் தாமு, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தல அஜித்தின் சிறந்த கலை சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான், அவர் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை தேடி வந்தார். மேலும் ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

நடிகர், கார் ரேஸர், பைக் ரேஸர், போட்டோகிராபர் உள்ளிட்ட பல துறைகளில் அவர் சாதனை செய்து வரும் நிலையில், அவருக்கு தற்போது பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்ம விருதுகள் பெற்றுள்ள தமிழகத்தை முக்கிய நபர்களின் விபரங்கள் இதோ.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை - நல்லி குப்புசாமி செட்டி
கலைத்துறை - நடிகர் அஜித் குமார்
கலைத்துறை -  நடிகை ஷோபனா
கலைத்துறை -  தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரை
பிரபல சமையல் கலைஞர் -  செஃப் தாமு
இலக்கிய பிரிவு - லக்ஷ்மிபதி ராமசுப்பையர்
அறிவியல் மற்றும் பொறியியல் -  எம்.டி.சீனிவாஸ்
விளையாட்டுத்துறை -  ரவிசந்திரன் அஸ்வின்
கலைத்துறை பிரிவில் தெருக்கூத்து கலைஞர் -  பி.கே.சம்பந்தன்
வர்த்தகம் தொழில்துறை -  ஆர்.ஜி.சந்திரமோகன்
கலைத்துறை பிரிவு -  ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி
இலக்கியம் மற்றும் கல்வி -  சீனி விஸ்வநாதன்
பறை இசைக்கலைஞர் -  வேலு ஆசான்

Edited by Siva