1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 ஜனவரி 2025 (08:11 IST)

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு முதல்வர், துணை முதல்வர், கனிமொழி வாழ்த்து..!

இந்தியாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களது வாழ்த்து இதோ:
 
முதல்வர் ஸ்டாலின்: தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசின் #PadmaBhushan விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் திரு. அஜீத்குமார், திரு. நல்லி குப்புசாமி, திருமிகு ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்; 
 
பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. அஸ்வின் ரவிச்சந்திரன், திரு. குருவாயூர் துரை, திரு. தாமோதரன், திரு. லக்‌ஷ்மிபதி ராமசுப்பையர், திரு. எ.டி. ஸ்ரீனிவாஸ், திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தன், திரு. ஆர்.ஜி. சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு. சீனி விஸ்வநாதன், திரு. வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
 
தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடைய வேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
 
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதுக்கு நடிகர் அஜித் சார், தொழில் அதிபர் திரு.நல்லி குப்புசாமி மற்றும் திருமிகு.ஷோபனா சந்திரகுமார் ஆகியோர் தேர்வாகி இருப்பது அறிந்து மகிழ்ந்தோம். அதேபோல, பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் சகோதரர்  ரவிச்சந்திரன் அஸ்வின்,  திரு.தாமோதரன், பறையிசை கலைஞர் சகோதரர் திரு.வேலு ஆசான், இசைக்கலைஞர் புதுவை தட்சிணாமூர்த்தி, தெருக்கூத்துக் கலைஞர் திரு.புரிசை கண்ணப்ப சம்பந்தன், திரு.குருவாயூர் துரை, திரு.லக்‌ஷ்மிபதி ராமசுப்பையர், திரு.எ.டி.ஸ்ரீனிவாஸ், திரு.ஆர்.ஜி. சந்திரமோகன், திரு.ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு.சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு என் அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளோர், அவரவர் துறைகளில் மென்மேலும் சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமைத்தேடித் தர வாழ்த்துகிறோம்.
 
திமுக எம்பி கனிமொழி: தமிழ்நாட்டிலிருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் திரு. அஜீத்குமார், திரு. நல்லி குப்புசாமி செட்டியார், திருமிகு. ஷோபனா சந்திரகுமார்‌ மற்றும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு.  அஸ்வின் ரவிச்சந்திரன் , திரு. குருவாயூர் துரை, திரு. தாமோதரன், திரு. லக்‌ஷ்மிபதி ராமசுப்பையர், திரு. எ.டி. ஸ்ரீனிவாஸ், திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தன், திரு. ஆர்.ஜி. சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு. சீனி விஸ்வநாதன், திரு. வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Siva