திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (10:53 IST)

விஸ்வாசம்' செகண்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அஜித் ரசிகர்கள் குஷி

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த லுக் வெளியாகும் தேதியை அஜித்தின் பி.ஆர்.ஓ தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி இந்த படத்தின் செகண்ட்லுக் அக்டோபர் 25ஆம் தேதி அதாவது நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த செகண்ட்லுக் முதல் லுக் போலவே இணையதளங்களை அதிர வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு தவிர மீதி அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டதாகவும், அந்த பாடல் அடுத்த வாரம் மும்பையில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டி.இமான் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்களும் ஒலிப்பதிவு செய்து தயாராகிவிட்டதாகவும் மிக விரைவில் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது