திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (16:29 IST)

பொங்கலுக்கு ’பேட்ட’ - ’விஸ்வாசம்’! வசூலை பாதிக்கும் அபாயம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில கார்த்திக் சுப்பராஜ் இயக்கக்கியுள்ள 'பேட்ட'படத்தில் ரஜினி நடித்துள்ளார்.  இதில் ரஜினியுடன்  த்ரிஷா, சசிகுமார், விஜய்சேதுபதி, சிம்ரன்,  நவாசுதீன் சித்திக்கி,  உள்ளிட்ட பலர் நடித்துளளஇப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு சிலநாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததால், போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாகநடந்து வருகிறது.
டிசம்பரில் ரஜினி பிறந்த நாளன்று பேட்ட பட டீஸரை வெளியிட படக்குழுதிட்டமிட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
சிறுத்தை சிவா இயக்கத்தில்  அஜித், நயன்தாரா,  நடித்து வரும்  ‘விஸ்வாசம்’பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துவிட்டது. தற்போது இப்படத்தின்இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. .படப்பிடிப்போடுபடத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் சேர்ந்த நடந்து வருகிறது. இதனால்பொங்கலுக்கு விஸ்வாசம் படம் வெளியாவது உறுதி  என்று படக்குழு திட்டவட்டமாகதெரிவித்துள்ளது. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம்தயாரித்து வருகிறது.
 
ஆனால், ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ இரண்டுமே ஒரே தேதியில் வெளியானால் வசூல்ரீதியாக பின்னடைவு ஏற்படும் என்று விநியோகஸ்தர்கள்  கவலை தெரிவிக்கிறார்கள்.இதில் ஏதாவது ஒரு படம் கடைசி நேரத்தில் தள்ளிப்போகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக பேட்ட படம் குடியரசு தினத்துக்குதள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பேட்ட படத்தை பொங்கலுக்கு வெளியிடுவது குறித்து இறுதியான முடிவு இன்னும் வெளியாகவில்லை.