1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (09:41 IST)

ஆட்டோ ஓட்டும் ரசிகையின் நெகிழவைக்கும் ஆசை! நிறைவேற்றுவாரா தல

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சரோஜா. அஜித்தின் தீவிர ரசிகையான இவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். 
 
அஜித் பற்றியே எல்லோரிடமும் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பாராம். இவருக்கு ஒரு நீண்ட நாள் ஆசை இருக்கிறதாம். அது பற்றி அவர் கூறுகையில்,
 
எனக்கு தல அஜித்தை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவரைப் பத்தி கவிதைப் புத்தகம் ஒண்ணு எழுதிட்டிருக்கேன். முழுக்க முழுக்கக் கவிதைகள்தான். முழுசுமே அஜித்தைப் பத்தின கவிதைகள்தான். இதை தல அஜித்துக்கிட்ட கொடுக்கணும். இதுவொரு ஆசை எனக்கு.
 
அப்புறம்… தல அஜித்தோட படத்துல ஓபனிங்ல பாட்டு வைப்பாங்கதானே. அந்த ஓபனிங் ஸாங் எழுதணும்னு ரொம்பநாளா ஆசை. ஒரேயொரு படத்துக்கு, ஒரேயொரு பாட்டு.. தல அஜித்துக்கு எழுதணும். அது ஓபனிங் ஸாங்காவும் இருக்கணும். தல அஜித்தைப் பத்தி சூப்பரா எழுதுவேன். அது செம ஹிட்டாகும் பாருங்க. இந்த என் ஆசை நிறைவேறினாப் போதும் என்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.