தல, தளபதி செம்ம... மற்ற நடிகர்கள் எப்படி இருங்காங்க பாருங்க?
சமூக வலைதளங்களில் தங்களுக்கு பிடித்த நடிகர்களை வித்தியாசமான முறையில் போட்டாஷாப் செய்து அழகுபடுத்தி பார்ப்பதில் ரசிகர்களுக்கு கொள்ளை இன்பம்.
அந்த வகையில் நடிகர் அஜீத்தை அண்ணாவாகவும், விஜய்யை வ.உ.சிதம்பரனாராகவும், அழகாக டிசைன் செய்துள்ளனர். இதேபோல் ரஜினியை, தேசிய கீதம் பாடல் எழுதிய கவிஞர் ரவிந்தர்நாத் தாகூராகவும், கமலை நேதாஜியாகவும் வரைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயனை நேருவாகவும், விஜய்சேதுபதியை காமராஜராகவும் வரைந்துள்ளனர், த்ரிஷாவை இந்திரா காந்தியாகவும், சூர்யாவை பகத் சிங்காகவும் தத்ரூபமாக வரைந்துள்ளனர். இதேபோல் சிம்புவை விவகானந்தராகவும், உதயநிதி ஸ்டாலினை கருணாநிதியாகவும் டிசைன் செய்துள்ளனர்.
தத்ரூபமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.