செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:40 IST)

யோகிபாவுவின் கூர்கா படத்தில் இணையும் கனடா நடிகை

கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகர் யோகி பாபு. தற்போது தளபதி விஜய்யின் சர்கார் படத்தில் நடித்துள்ளதுடன், தல அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்,

இத்துடன் சுந்தர் சி- சிம்பு கூட்டணியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில சாம் ஆண்டன் இயக்கும் கூர்கா என்ற படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்,. இந்த படத்தில் கனடா நாட்டு நடிகை எலிஸ்ஸா முக்கிய வேடத்தில் நடிக்கிறார், ஆனால் இவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை.  கனடா நடிகை எலிஸ்ஸா அமெரிக்க தூதராக நடிக்கிறார்,

இந்த படம் குறித்து சாம் ஆண்டன் கூறுகையில், நடிகைக்கான தேர்வில் சிறப்பான அசத்தியதால் எலிஸ்ஸாவை தேர்வு செய்தோம், டிசம்பரில் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்த படத்தில் நாய் ஒன்று படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுக்க நாயகனோடு வர உள்ளது,