செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (19:32 IST)

துப்பாக்கிச் சூடு நடத்திய பாஜக பெண் தலைவர் ..வைரலாகும் வீடியோ

நேற்றிரவு பிரதமர் மோடி அனைவரது வீடுகளிலும் விளக்கு ஏற்றச் சொல்லியிருந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஒருவர் துப்பாகிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம்  பாரத பிரதமர், மோடி, ஏப்ரல் 5 ஆம் தேதி அனைவரும் வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு , மெழுகுவர்த்தி ஏற்றும்படி கோரியிருந்தார்.
இதையேற்று நேற்று இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் விளக்குகளை ஏற்றினர். இதுபாரத மக்கள் ஒன்றிணைந்து கொரோனாவை எரித்து போராட வேண்டும் என்பதைக் குறிப்பதாகவே பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு விளக்கு ஏற்றச் சொல்லியிருந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில பால்ராம்புர்  பாஜக மகளிரணி தலைவர் மஞ்சரி திவாரி   துப்பாகிச் சூடு நடத்தியதற்கு, அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.