செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated: சனி, 29 பிப்ரவரி 2020 (18:48 IST)

கூலாக குறி பார்த்து துப்பாக்கிச் சுடும் அஜித் - வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தல என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக பார்முலா ரேஸர் பந்தயங்களில் அஜித் பங்கேற்றுள்ளார். கார் ரேஸ் மட்டுமின்றி பைக் ரேஸ் , நடிகர் , போட்டோகிராபர் , விமானம் வடிவமைத்தல் உள்ளிட்டவற்றில் பல துறைகளில் சிறந்து விளங்கும் தல அஜித் அவர்கள் தற்போது அதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  
 
தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  அஜித்திற்கு விபத்து ஏற்பட்டது. பின்னர் சில நாட்கள் ஓய்வில் இருந்து வந்த அவர் சமீபத்தில் தனது மேனஜரின் குடும்பத்தார் திருமணதில் பங்கேற்றிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.  
 
இந்நிலையில் தற்போது அஜித் துப்பாக்கிச் சுடும் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. காதில் தேசிய கொடி வரையப்பட்ட ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு பச்சை நிற டீ ஷர்ட் அணிந்து குறி பார்த்து துப்பாக்கி சுடும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.