புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (14:31 IST)

யோகி பாபுவின் தோள் மேல் கைபோட்டு போஸ் கொடுத்த அஜித்… விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!

சில ஆண்டுகளாகவே நடிகர் யோகிபாபுவை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஒரு நடிகர் “என்னைத் தொடாதே” என சொன்னதாகவும், அந்த நடிகர் யார் என்பது குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.இந்த  பிரச்சனையை தொடங்கி வைத்ததே வலைப்பேச்சு என்ற யுடியூப் சேனல் மூலமாக சினிமா செய்திகளை வெளியிட்டு வரும் அந்தனனும் பிஸ்மியும்தான்.

இந்நிலையில் யோகி பாபு வலைப்பேச்சு சேனல் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அதற்கு பதிலளித்த பிஸ்மி “யோகி பாபு சொல்வது பொய்யான ஒன்று. அதற்கு ஆதாரம் இருந்தால் அவர் நிரூபிக்கட்டும். அதே போல யோகி பாபுவை ஒரு ஹீரோ என்னைத் தொடாதே என்று சொன்னதாக நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தகவலை சொல்லியிருந்தோம். அந்த ஹீரோ வேறு யாரும் இல்லை, அஜித்தான். அதுமட்டுமில்லை அந்த தகவலை எங்களிடம் பகிர்ந்ததே யோகிபாபுதான்” எனவும் கூறியிருந்தார்.

இதனால் அஜித் மீதும் சில விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் இருக்கும் அஜித்துடன் யோகிபாபு ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் யோகிபாபுவின் தோள்மேல் அஜித் நட்புடன் கைபோட்டுக் கொண்டு நிற்கிறார். இதன் மூலம் அஜித், யோகி பாபுவிடம் தீண்டாமையைக் கடைபிடித்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர்.