ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2024 (09:12 IST)

மீண்டும் அஜித்துடன் ஒரு கிளாஷா?... கூலி படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது.  லோகேஷ் கன்கராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  மேலும் அமீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது விறுவிறுப்பாக இதன் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் மே 1 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே தேதியில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஒன்றாக ரிலீஸாகின என்பது குறிப்பிடத்தக்கது.