திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (09:47 IST)

இலங்கைபோய் ராவணணையும் நான்தான் கொன்றேன் என்று மோடி சொன்னாலும் சொல்வார்! விமர்சிக்கும் அரசியல் கட்சித் தலைவர்!

இலங்கைக்குப் போய் ராவணணையும் நான்தான் கொன்றேன் என பிரதமர் மோடி சொன்னாலும் சொல்வார் என ராஷ்டிரிய லோக்தள் கட்சியின் தலைவர் சௌத்ரி அஜித் சிங் விமர்சித்திருக்கிறார். 
 
மக்களவைத் தேர்த்ல்களம் சூடுபிடித்து வரும் சூழலில், அரசியல் கட்சிகள் மாறிமாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்தவகையில், உத்தப்பிரதேசத்தின் பாக்பாத் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சௌத்ரி அஜித் சிங், பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும் கடுமையான விமர்சனங்களை மோடி மீது அவர் முன்வைத்தார். 
 
அவர் பேசுகையில், `மோடி மிகவும் புத்திசாலி. அவர் இலங்கைக்குப் போயிருந்தால், நான்தான் ராவணனைக் கொன்றேன் என்று சொன்னாலும் சொல்வார். ஏனென்றால், அவரைத் தவிர வேறு யாரும் எதையும் செய்யவில்லை என்பது போன்ற தோற்றத்தை பா.ஜ.க உருவாக்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் உடைகளுக்காக மட்டும் அரசுப் பணம் 70,000 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. எங்களுக்கு வாட்ச்மேன் (சௌகிதார்) வேண்டுமென்றால் நாங்கள் நேபாளத்தில் இருந்து கிடைப்பார். ஆனால், எங்களுக்குத் தேவை பிரதமர் மட்டுமே என்று அஜித் சிங் விமர்சித்தார்.