செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (09:56 IST)

‘விருமாண்டி 2’ படத்தில் அஜித் நடிக்கின்றாரா? வைரலாகும் போஸ்டர்

‘விருமாண்டி 2’ படத்தில் அஜித் நடிக்கின்றாரா?
உலகநாயகன் கமலஹாசன் நடிக்க வேண்டிய சில படங்களில் பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. குறிப்பாக தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமான ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் முதலில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அதில் ஒரு வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது 
 
அதேபோல் கமலஹாசனின் கனவு திரைப்படமான ‘மருதநாயகம்’ திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட்டால் தான் நடிக்கப் போவதில்லை என்றும் தனக்கு பதிலாக இதில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பார் என்றும் கமல்ஹாசன் தரப்பில் இருந்து செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் கமலஹாசனின் வெற்றித் திரைப்படங்களில் ஒன்றான ’விருமாண்டி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் அஜீத் ரசிகர்கள் ’விருமாண்டி 2’ படத்தின் போஸ்டர்களை வடிவமைத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரல் ஆக்கி வருகின்றனர் 
 
தற்போது அஜித் ’வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் அவர் மீண்டும் ஹெச்.வினோத்துடன் இணைந்து ‘விருமாண்டி’ படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்திகள் எல்லாம் உறுதி செய்யப்படும் வரை பொறுமை காப்போம்