1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (21:02 IST)

‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகுகிறாரா ஷங்கர்?

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’
 
இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கும் முன்னரே இந்த படம் டிராப் ஆனது என்று ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் அதன் பின்னர் பல தடைகளை மீறி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து ஒன்றினால் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளது என்றும் பட்ஜெட்டை பாதியாக குறைக்க வேண்டும் என்றும் லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கரை கேட்டுக்கொண்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த ஷங்கர் இந்த படத்தில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது