ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (15:31 IST)

திறனறிந்து அதை வளர்த்திடுவோம் – நடிகர் கமல்ஹாசன்

இன்று இளைஞர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பிரதமர் மோடி, நாடறிந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள் என பலரும் இளைஞர்கள் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளதுடன் அவர்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

நம்மை மேம்படுத்திடவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம். இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் நினைவுறுத்துவோம். திறனறிந்து அதை வளர்த்திடுவோம் என்று சொல்ல இதைவிட சிறந்த நேரமில்லை எ னப் பதிவிட்டுள்ளார்.