திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 மே 2019 (08:15 IST)

கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மாமனாரை உயிரோடு கொளுத்திய மருமகள்!

திருவள்ளூர் அருகே கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து மாமனாரை உயிரோடு கொளுத்தி கொலை செய்த மருமகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
திருவள்ளூர் அருகே நெமிலி என்ற பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. 
 
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பிரபாகரனும் காயத்ரியும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் பிரபாகரனின் தந்தை சபாபதி தனது மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ஒரு பெண்ணையும் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
 
இந்த செய்தி அறிந்து காயத்ரி தனது தாயாருடன் சென்று மாமனாரிடம் நியாயம் கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமான காயத்ரி மாமனார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி அவரை உயிரோடு கொளுத்தினார். இதனால் படுகாயம் அடைந்த சபாபதி, இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலத்தில் தனது நிலைக்கு காயத்ரியும் அவரது தாயார் கலைவாணியும் காரணம் என்று கூறிவிட்டு உயிரிழந்தார். இதனையடுத்து காயத்ரியையும், கலைவாணியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமனாரை மருமகள் உயிருடன் கொளுத்தி கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது