திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (19:14 IST)

21 நாள் ஷூட் பண்ணின ஃபுட்டேஜ் காணாமல் போய்விட்டது- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தில் 21 நாள் ஷூட் பண்ணின ஃபுட்டேஜ் காணாமல் போய்விட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  - விக்ராந்த்- விஷ்ணு விஷால் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சலாம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
 
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று  வசூலிலும் ஏமாற்றியதாக தகவல் வெளியானது.
 
இந்த படத்தால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் கூறப்பட்டது. 
 
சமீபத்தில் இந்த படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஏ ஆர் ரகுமான் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 
இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின.
 
இந்த நிலையில், ஒரு மீடியாவுக்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைகா படம் பற்றி மனம் திறந்துள்ளார். அதில் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியதாவது: ''லால் சலாம் படத்திற்காக 21 நாள் ஷூட் பண்ணின ஃபுட்டேஜிய காணாமல் போய்விட்டது. ஆயிரக்கணக்கானோர் சூழ, 10 கேமரா மூலம் கிரிக்கெட் போட்டியை ஷூட் செய்தோம். அதெல்லாமும் மிஸ்ஸாகிவிட்டது.  என்ன பண்ணுவதென்று தெரியவில்லை.  ரீ ஷூட்டும் போக முடியவில்லை. என்ன ஃபுட்டேடஜ் கைவசம் இருந்ததோ அதை வைச்சு எடிட் செய்தோம்.  ஒரு பெரிய காம்பிரமைஸோடுதான் எடுத்ததை வைத்து படத்தை முடித்தோம். ஹார்டு டிக்ஸ் மட்டும் மிஸ் ஆகவில்லை எண்றால்  நாங்க சொல்ல வந்த விசயத்தை இப்படத்தில் தெளிவாக சொல்லியிருப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.