ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (15:19 IST)

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்?

aiswarya rajini
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்தை இயக்கினார்.
 
அதன்பின்னர், 2015 ஆம் ஆண்டு வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து சினிமா வீரன் என்ற டாக்குமென்டரி படத்தை இயக்கினார்.
 
சமீபத்தில் இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில், லைகா தயாரிப்பில் வெளியான படம் லால் சலாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது.
இதையடுத்து, நடிகர் சித்தார்த் இயக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா படம் வரவேற்பை பெற்ற நிலையில், அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.