‘ஐரா’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது பிரபல தொலைக்காட்சி!

Last Updated: புதன், 27 மார்ச் 2019 (15:07 IST)
நயன்தாராவின்  ‘ஐரா’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 

 
‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் 'ஐரா'. இந்தப் படத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா யமுனா, பவானி என  இரண்டு வேடங்களில் முதன்முறையாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம்  மிரட்டலான ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது.  சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் , ஸ்னீக் பீக் உள்ளிட்டவை ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.  
 

 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்,   ‘ஐரா’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான "விஜய் டிவி" கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளது. ‘இமைக்கா நொடிகள்’ , ‘விஸ்வாசம்’ படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக நயன்தாராவின்  ஐரா படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையையும்  அமேசான் ப்ரைம் வீடியோ பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :