வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (12:22 IST)

அறிவுகெட்டவனே... மூளையில்லா முட்டாளே... சீக்கிரம் செத்துரு: ராதாரவியை விளாசிய நடிகை

நயன்தாராவை விமர்சித்த ராதாரவியை நடிகை ஸ்ரீரெட்டி படுமோசமாக விமர்சித்துள்ளார்.
 
நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சமீபத்தில் நடந்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்காக ராதாரவி மன்னிப்பு கேட்டார்.
 
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், நயன் மேடம் சாரி, சற்று வேலையாக இருந்துவிட்டேன் அதனால் தான் என்னால் இதுபற்றி பேசமுடியவில்லை. இந்த ராதாரவி என்ன பேசுகிறார். ஒரு பெண் சூப்பர் ஸ்டாராக இருக்கக் கூடாதா? அவர் எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார். ராதாரவி முட்டாள் உன்னை நினைத்தால் கேவலமாக உள்ளது. இவ்வளவு வயதாகியும் என்ன பிரயோஜனம் மூளையில்லா முட்டாள், எதுக்கு உயிரோடு இருக்கிறாய் சீக்கிரம் செத்துடு. உன்னை திமுகவில் இருந்து நீக்கியது சரியே என ஸ்ரீரெட்டி என ஏகபோகமாக பேசியுள்ளார்.