திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2020 (16:29 IST)

திடீரென வந்த பிசாசு 2 அப்டேட்… மிஷ்கினை கைவிட்ட அருண் விஜய் & சிம்பு!

இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக பிசாசு 2 படத்தினை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் அஞ்சாதே, முகமூடி, நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ, சவரகத்தி என பல வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இதற்கிடையில் நடிகர் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்கி அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. பின்னர் இந்த விகாரம் முற்றியதை அடுத்து மிஸ்கின் இந்த படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் அவர் சிம்புவுக்கு அஞ்சாதே 2 கதையும், அருண் விஜய்க்காக ஒரு போலிஸ் கதையும் சொல்லி இருந்தார். முதலில் அருண் விஜய் படத்தை எடுத்துவிட்டு அதன் பின்னர் சிம்பு படத்தை இயக்கும் முனைப்பில் இருந்தார். ஆனால் ஹீரோக்கள் தரப்பில் இருந்து எந்த பாசிட்டிவ் தகவலும் வராததால் இப்போது பிசாசு 2 படத்தை ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.