கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்த ரஜினி பட இயக்குனர்!

Last Modified புதன், 17 ஜூலை 2019 (13:19 IST)
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆளும்கட்சியான அதிமுக மற்றும் பாஜகவினர் சூர்யாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சீமான், நாஞ்சில் சம்பத், கமல்ஹாசன் உள்பட ஒரு சில அரசியல்வாதிகள் சூர்யாவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய பேச்சுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களையும், ஆதரவாக வந்த கருத்தையும் சூர்யா கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளார்
இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து இயக்குநர் பா ரஞ்சித் அவர்களும் சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

ranjith
புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர், பெண்கள், மாணவர்கள் எதிர்காலம் குறித்தும் சிந்தித்தும், பேசியும் செயல்பட்டும் வரும் சூர்யாவுக்கு நான் துணை நிற்போம் என்று இயக்குநர் பா ரஞ்சித் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்இதில் மேலும் படிக்கவும் :