திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 மார்ச் 2018 (22:33 IST)

பாகுபலி'க்கு பின் மீண்டும் சரித்திர படத்தில் சத்யராஜ்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் கட்டப்பா கேரக்டரில் நடித்த சத்யராஜூக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது உலக அளவில் இந்த கேரக்டருக்கு பாராட்டு கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சரித்திர கேரக்டரில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கும் படம் 'காளியான்'. சுதந்திரத்திற்கு முன்னர் மலபார் பகுதியில் வாழ்ந்த ஒரு அரசரின் உண்மைக்கதை தான் இந்த படம். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார். பாகுபலிக்கு இணையாக சத்யராஜின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றும் கூறப்படுகிறது.

எஸ்.மகேஷ் இயக்கும் இந்த படத்திற்கு சங்கர் ஈஷான் லாய் என்பவர் இசையமைக்கின்றார். ஏற்கனவே பிரித்விராஜ் நடித்த 'கண்ணாம்பூச்சி ஏனடா' என்ற படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார் என்பதும், 11 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரித்விராஜ் நடிக்கும் படத்தில் சத்யராஜ் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.