திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 18 அக்டோபர் 2017 (05:49 IST)

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்

நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் இன்றைய இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடித்த 'சத்யா' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் இவர் தற்போது 'ரங்கா' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.



 
 
இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு ஐடி இஞ்சினியர் ரேவதியை திருமணம் செய்த சிபிராஜுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இன்று அவருக்கு இரண்டாவது ஆண்குழந்தை பிறந்துள்ளது.
 
தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த மகிழ்ச்சியை சிபிராஜ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இரண்டாவது முறையாக அப்பாவாக புரமோஷன் ஆன சிபிராஜூக்கு நமது வாழ்த்துக்கள்