செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 ஜனவரி 2018 (06:30 IST)

நடிகர்களிடம் இருந்து விருதினை பெற மாட்டேன்: அடம் பிடித்த சத்யராஜ்

சமீபத்தில் விகடன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2'; ஆகிய படங்களில் சிறப்பாக நடித்த நடிகர் சத்யராஜூக்கு சிறந்த குணசித்திர விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை சத்யராஜ் ஒரு பெரிய நடிகரிடம் இருந்து பெறுவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் சத்யராஜோ தனக்கு எந்த நடிகரிடம் இருந்து விருதை பெற விருப்பமில்லை என்றும், உண்மையான சமூக போராளிகள் யாரையாவது தேர்வு செய்து விருதினை கொடுங்கள் என்று கேட்டு கொண்டாராம்.

இதனையடுத்து சத்யராஜின் விருப்பப்படி சமீபத்தில் பெற்றோர் என்றும் பாராமல் தண்டனை வாங்கி கொடுத்த சமூக நீதி போராளி கவுசல்யாசங்கர் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர்கள் இந்த விருதை சத்யராஜூக்கு கொடுத்தனர். சத்யராஜின் இந்த முடிவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.