புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2019 (11:43 IST)

ஆபாச போட்டோஷூட்: காஞ்சனா 3 பட நடிகைக்கு பாலியல் டார்ச்சர்

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் நடித்த நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விளம்பர நடிகரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் வெளியான் காஞ்சனா 3 படத்தில் கூட இவர் நடித்துள்ளார். இவருக்கும் விளம்பர நடிகர் ரூபேஷ்குமார் என்பவருக்கும் பணி ரீதியான நட்பு இருந்துள்ளது. 
 
விளம்பரப்படங்களில் நடிக்க வைப்பதாக அந்த ரஷ்ய பெண்ணுக்கு உறுதி அளித்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஆனால், அந்த புகைப்படங்களை மார்ஃப்ங் செய்து ஆபாச புகைப்படங்களாக்கி அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
 
மேலும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால், போலீஸில் புகார் அளித்த அந்த பெண் ரூபேஷ்குமார் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.
போலீஸார் விசாரணை மேற்கொண்டு ரூபேஷ்குமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.