திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (15:58 IST)

முட்டாள்: லாரன்ஸ் ரசிகரை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சா 3' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகியுள்ளது. முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பு இந்த படத்திற்கு இல்லை என்றாலும் இரண்டு நாட்களில் இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. இருப்பினும் நாளை முதல் கிடைக்கும் வசூலை பொறுத்தே இந்த படம் வெற்றிப்படமா? என்பதை சொல்ல முடியும்
 
இந்த நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் ரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகர்கள் போல் ராகவா லாரன்ஸ் ரசிகர்களும் அவருடைய கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர். ஒரு ரசிகர் ஒரு படி மேலே போல் கிரேனில் தொங்கியபடியே ராகவா லாரன்ஸ் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தார். இந்த ஆபத்தான முறையை சமூக வலைத்தள பயனாளிகள் கண்டித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் மூடர் கூடம்' இயக்குனர் நவீன் இதுகுறித்த வீடியோவை பார்த்து அந்த ரசிகரை முட்டாள் என விமர்சனம் செய்துள்ளார். மேலும் ரசிகர்களின் இந்த மாதிரி செயல்களை கண்டிக்கவும் அவர் ராகவா லாரன்ஸூக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள டுவிட்டில், 'இது நம்மை நாமே அழித்துக் கொள்ளக்கூடிய முட்டாள் தனம். லாரன்ஸ் மாஸ்டர் உங்களது ரசிகர்களுக்கு அறிவூட்டுங்கள். இப்ப சமீபத்துலதான் ஒரு சாமியார் விழுந்து செத்தான். தொங்குற இந்த முட்டாள நம்பி கண்டிப்பா ஒரு குடும்பம் இருக்கும். அவர்களுக்கு யார் பொறுப்பு. இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை ஊக்கப்படுத்தாதீர்கள்” என்று கூறியுள்ளார்.