புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (10:24 IST)

வலையில் விழுந்த பெண்கள்; ஹோட்டல் ரூம், வீடியோ... ஆளும் கட்சி முக்கிய புள்ளிகளின் வக்கிரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தை உலுக்கி எடுத்த நிலையில், அடுத்து பெரம்பலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை சீரழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெரம்பலூரில் உள்ள லோக்கல் சேனலை சேர்ந்த நபர் ஒருவ்ர, எனக்கு அளும் கட்சியின் முக்கிய நபர்களுடன் தொடர்பு உள்ளது. அவர்களிடம் பேசி வேலை வாங்கி தருகிறேன் என கூறி அப்பாவி பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவர்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 
 
இதனை அந்த பெண்களுக்கு தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு அதை அந்த பெண்களிடம் காட்டி மீண்டும் தனது நண்பர்களுடனும் பாலியல் உறவு வைக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். இதோடு, பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர். பணம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என பலரை மிரட்டி பணியவைத்துள்ளனர். 
இது குறித்து புகார் அளித்துள்ள வழக்கறிஞர் அருள் கூறியதாவது, சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி திருமணமான பெண்களை குறிவைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் இதில் தனியார் பள்ளி ஆசிரியைகள், இளம் பெண்கள் ஆகியோரும் அடக்கம். 
 
இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.