1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (14:01 IST)

பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் - கங்கனா ரணாவத் பரபரப்பு பேட்டி

தனது தந்தை வயதுள்ள பாலிவுட் நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒருமுறை ஒரு பேட்டியில் கூறிய கங்கனா ரனாவத், தனக்கு 17 வயது இருக்கும் போது ஒரு நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியிருந்தார். ஆனால், அது யார் என அவர் அப்போது கூறவில்லை. ஆனால், சமீபத்தில் அளித்த பேட்டியில் அது யார் என தெரியவந்துள்ளது.


 

 
நடிகரும், தயாரிப்பாளரும், பின்னணி பாடகருமான ஆதித்யா பஞ்சோலிதான் கங்கனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி கூறியுள்ள கங்கனா “நான் அவரின் மகளின் வயதை விட ஒரு வயது சிறியவள். அப்போது நான் மைனர். அதாவது 17 வயது இருக்கும் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அது எனக்கு புதிதாக இருந்தது. அவரின் தொல்லை குறித்து அவரின் மனைவியிடம் சென்று புகார் அளித்தேன். என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சினேன். இதுபற்றி என் பெற்றோரிடம் கூற முடியாது என அழுதேன். ஏனெனில், இந்த விஷயம் தெரிந்தால் என் பெற்றோர்கள் கவலைப்படுவார்கள். 


 

 
ஆனால், ஒருமுறை என்னை தலையில் தாக்கினார். எனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. நானும் அவரை திரும்பி தாக்கினேன். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின் நான் போலீசாரிடம் புகார் அளித்தேன். அவரை போலீசார் எச்சரித்தனர். அதன்பின் அவர் எனக்கு தொல்லை தருவதில்லை” என அவர் தெரிவித்தார்.
 
கங்கனா ரனாவத்தின் இந்த பேட்டி பாலிவுட்டில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.