ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (13:28 IST)

ரக்‌ஷா பந்தன் விழாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீசார்...

சதீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற ரக்‌ஷா பந்தன் விழாவில், ஆதிவாசி மாணவிகளிடம் போலீசாரே செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அந்த மாநிலத்தில் உள்ள தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பல்நார் எனும் இடத்தில் ஆதிவாசி மாணவிகள் படிக்கும் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அங்கு நிரந்தரமாகவே மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமிட்டுள்ளது.
 
அந்நிலையில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தான் விழா சமீபத்தில் அந்த பள்ளியில் கொண்டாடப்பட்டது. அப்போது, அந்த பள்ளி மாணவிகள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ராக்கி கயிறுகளை கட்டியுள்ளனர். அப்போது சில போலீசார் அவர்களிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், கழிவறைக்கு சென்று விட்டு மாணவிகள் திரும்பி வரும் போதும், சில வீரர்கள் அவர்களின் உடலில் கை வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த விவகாரம் குறித்து, அந்த மாணவிகள் பள்ளி வார்டனிடம் கூற, அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சவுரப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மத்திய படை டி.ஐ.ஜி. ஆகியோர் அந்த பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த புகாரின் அடிப்படியில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணைக்குழு ஆய்வு நடத்தி வருகிறது.