ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் மல்லுக்கட்டும் பீட்டா!
ஜல்லிக்கட்டுக்கு எதிரா மீண்டும் மஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் மல்லுக்கட்டும் பீட்டா!ல்லுக்கட்டும் பீட்டா!
தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக பீட்டா அமைப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி வழக்கு பதிவு செய்துள்ளது.
காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டுக்கு தடையை கொண்டு வந்தது மத்திய அரசு. ஆனால் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டது மத்திய அரசு.
ஆனால் பீட்டா போன்ற விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை நாடி அந்த அறிவிக்கைக்கு தடை வாங்கு ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தவிடாமல் செய்தது. பல்வேறு வகைகளில் முயன்றும் சட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாறவில்லை.
இதனால் தமிழகத்தில் மக்கள் போராட்டம் வெடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது. மத்திய, மாநில அரசிகள் மக்களுக்கு அடிபணிந்தது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடைக்கும் விதமாக மாநில அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. அதற்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கினர்.
இதனையடுத்து இந்த வருடம் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடைபெற்றதாக கூறி பீட்டா அமைப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மிருகவதை நடைபெற்றதற்கான ஆதரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது பீட்டா. இதனையடுத்து ஜல்லிக்கட்டு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.