அதிதி சங்கரை புறக்கணிக்கும் முன்னணி ஹீரோக்கள் - வாய்விட்டு மாட்டிக்கிட்டியேமா!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.
மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சமீப நாட்களாக பெரிய ஹீரோக்கள் அதிதி ஷங்கரை புறக்கணித்து வருகிறார்களாம். காரணம் பேட்டி ஒன்றில் அதிதி சங்கர் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ சூர்யா என கூறினாராம். இதை கேட்டு மற்ற பெரிய ஹீரோக்கள் அந்த நடிகையை என் படத்தில் போடாதீங்க என ஓப்பனாகவே கூறி வருகிறார்களாம். எதுக்கு இந்த வேலை? வாய் வச்சிட்டு சும்மா தான் இருந்தா என்ன? என விமர்சித்துள்ளனர்.