பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... கியூட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் விஜய் விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.
'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால், அம்மணி பாலிவுட்டில் ஜொலிக்கவேண்டும் என்ற கனவோடு உடல் எடையை குறைத்து வாய்ப்புகளை இழந்துவிட்டார்.
தொடர்ந்து ஸ்லிம் பிட் லுக்கில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பூங்கொத்து வைத்துக்கொண்டு செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.