புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (11:57 IST)

புடவையில் கன்னாபின்னா கவர்ச்சி - அருவி பட நடிகையை திட்டி தீர்த்த ரசிகர்கள்!

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அருவிப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த நடிகை அதிதி பாலன். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்து விருதுகளை குவிக்கச்செய்தது. இந்த படத்திற்கு முன்பே இவர் அஜித் நடித்திருந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரிந்திராது.

அதையடுத்து அருவி படத்தில் அதிதி பாலன் மிகவும் சிம்பிளாக நம் பக்கத்து  வீட்டு பெண் போல அவ்வளவு எளிமையுடன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி  ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருந்தார். இருந்தாலும் அந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.



இந்நிலையில் தற்போது கவர்ச்சி உலகில் தடம் பதித்துள்ளார். அந்தவகையில் சமீபத்தில் மஞ்சள் நிற சேலையில் கவர்ச்சியான சில போஸ் கொடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகரகள், இப்படியெல்லாம் கவர்ச்சி காட்டினாள் பட வாய்ப்பு கிடைக்குமா என கேட்டு வருகின்றனர்.