1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 18 ஜனவரி 2020 (19:22 IST)

படமாகிறது நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை - ஹீரோ ஹீரோயின் யாருன்னு! பாருங்க!

தமிழ் சினிமாவில் பலரும் பார்த்து பொறாமைப்படும் காதல் ஜோடியாக வலம் வந்துகொண்டிருப்பவர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களது காதல் மற்ற காதலர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது. அந்த அளவிற்கு ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பு,  மரியாதை, பாசம் உள்ளிட்டவை நம் அனைவரையும் கவர்ந்து லவ்ன்னா இப்படி இருக்கனும்டா என யோசிக்க வைக்கிறது. 
 
இந்நிலையில் தற்போது இவர்களது காதலை மையப்படுத்தி  ‘ நானும் சிங்கிள் தான் ‘ என்ற படமொன்று உருவாகி வருகிறது. கோபி என்பவர் இயக்கும் இப்படத்தை THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயகுமார், புன்னகை பூ கீதா இணைந்து தயாரிக்கின்றனர். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் தீப்தி திவேஸ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
இப்படம் குறித்து பேசிய இயக்குனர் கோபி, தமிழ் சினிமாவில் நயன்தாராவின் காதல் மிகப் பிரபலம். அந்தக் காதலை அடிப்படையாக வைத்தே இப்படத்தின் கதையை தயார் செய்துள்ளோம்.  அதுமட்டுமின்றி நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். நயன்தாராவுக்கு டாட்டூ குத்திய நபராக ஹீரோ வருகிறார். இதில் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் அடங்கியிருக்கிறது. இந்த படம் சிங்கிள்ஸ் பசங்க முதல் ஒட்டுமொத்த காதலர்களுக்கும் செம்ம எண்டெர்டைன்மெண்ட் படமாக நிச்சயம் அமையும் என அவர் கூறினார்.