1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 18 ஜனவரி 2020 (14:52 IST)

இருட்டறையில் முரட்டுக்குது 2 படத்தில் மியா கலீபா...?

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வந்த இருட்டறையில் முரட்டுக்குது படத்தின் அடுத்த பாகத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களின் முகத்தில் கள்ளச்சிரிப்பை வர வைத்தது. 18ப்ளஸ் அடல்ட் படமாக வெளியான இப்படத்தின் இரண்டாம் படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் நடிகர் டேனி. 
 
இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மியா கலீபாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு "  எங்கள் படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த மியாகலிபாவிற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த புகைப்படத்தில் டேனி மியா கலீபாவுடன் இருப்பது போன்று மார்பிங் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.   
 
இருந்தாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் நிச்சயம் இப்படம்  வெளிவந்து நல்ல கலெக்ஷனை ஈட்டும் என பரவலாக கூறப்படுகிறது.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#suprise #visit #to #our #shooting #thanks @miakhalifa #iruttuaraiyilmurattukuthu -2 #maja ka #maalu

A post shared by Daniel Annie Pope (@danianniepope) on