1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 18 ஜனவரி 2020 (12:40 IST)

தனது தாய்க்கு பிரசவம் பார்த்தவரை நேரில் சென்று சந்தித்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் உச்ச நடைகற்களுளுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக சினிமா துறையில் நுழைந்து தனது திறமையினாலும் விட முயற்சியினாலும் முன்னுக்கு வந்துள்ளார், மெரினா படத்தின் மூலம் திரைத்துறையில் ஹீரோவாக தடம் பதித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர் நீச்சல், ரெமோ , ரஜினி முருகன், சீமா ராஜா கனா, நம்ம வீட்டு பிள்ளை என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக வளர்ந்துக்கொண்டிருக்கிறார். 
 
தற்ப்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சொந்த ஊரான சிங்கம்புணரிக்கு சென்ற சிவகார்திகேயன் தான் பிறக்கும் போது தனது தாயாருக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சின்னையாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதையடுத்து தனது தாயாரின் சொந்த ஊரான பிரான் மலைக்கு சென்று அங்குள்ள மக்களையும், சொந்தங்களையும் சந்தித்துள்ளார். 
 
தற்போது சிவகார்த்திகேயன் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு இடம் பெற்றிருப்பதால் அதன் நியாபகமாக தனது தாயாருக்கு பிரசவம் பார்த்த டாக்டரை சந்தித்திருக்கலாம் என கூறப்படுகிறது.