செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (15:24 IST)

சிம்புவுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்!

நடிகை அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும், நடிப்பில் கால்பதித்துள்ளார். இப்போது கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னரே இப்போது அதிதிக்கு மற்றொரு முன்னணி கதாநாயகனோடு ஜோடி சேரும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.