ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 8 ஏப்ரல் 2023 (16:41 IST)

செக் மோசடி... விஜய் பட நடிகைக்கு பிடிவாரண்ட் உத்தரவு!

amisha patel
விஜய் பட நடிகைக்கு  நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் சினிமாவில்  கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்தில், நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தவர் அமீஷா பட்டேல். இவர், இந்தி, தெலுங்கு சினிமாவிலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், குணால் குமாருடன் இணைந்து அமீஷா பட்டேல் இந்தி படமொன்று தயாரிக்கவுள்ளதாகக் கூறி அஜய்குமார் சிங்கிடம் ரூ.2.5 கோடி கடன் பெற்றார்.

இந்தக் கடனை திரும்பக் கொடுக்கவில்லை என்பதால், அஜய்குமார் தான் கொடுத்த கடனை கேட்டுவந்துள்ளார்.

அப்போது, நடிகை அமீஷா பட்டேல் ரூ.2.5 கோடிக்கான இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார்.

இந்தக் காசோல்களை வங்கியில் செலுத்திய போது, பணமின்றித் திரும்ப வந்தது. இதையடுத்து, அமீஷா பட்டேல் மீது அஜய்குமார்  நீதிமன்றத்தில் செக் மொசடி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அமீஷா பட்டேலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தி ஆஜராகவில்லை. எனவே, அமீஷா பட்டேல் மற்றும் குணால்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவ்வழக்கு வரும் 15 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்